பார்த்த ஞாபகம் இல்லையோ


பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ?................ (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்!.............. (பார்த்த)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்!............ (பார்த்த)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை........................(பார்த்த)
சமீபத்தில் நான் ரசித்த பழைய பாடல் - புதிய பறவை படத்திலிருந்து

உண்ர்வுகள்


உன்னுடன் பேசாதவரை
ஊற்றெடுக்கும் என் காதல் உணர்வுகள்
உன்னுடன் பேசிய பிறகு
உருவாவதோ கவலை உண்ர்வுகள்தான்..
ஆமாம்! ஒரு பேச்சுக்கு கூட
காதலை பற்றி பேசியதே இல்லை
பேசி முடித்த பிறகு
அதை நினைத்து
அழாத நாட்களில்லை.........!
************

நன்றி மறப்பது நன்றன்று

எங்கள் ஊரான

அரியலூர்
23 - 11- 2007 முதல்
மாவட்டமாக
செயல்பட உள்ளது.
இதற்காக
எங்கள் ஊராரை விட,
பெருமுயற்சி செய்திட்ட

தமிழின போராளி,
இனமானகாவலர்,
இடஒதுக்கீட்டு நாயகர்,
மக்கள் காவலர்,
மாண்புமிகு
டாக்டர் அய்யா அவர்களுக்கும்,
மாவட்டம் வழங்கி,
எங்களை பெருமை படுத்திய,

தமிழின தலைவர்,
செம்மொழி சிங்கம்,
எங்கள் தங்கம் ,
தமிழகமுதல்வர்
மாண்புமிகு
டாக்டர் கலைஞர் அவர்களுக்கும்,
இந்த சிறிய
தமிழனின்

பெரிய நன்றிகள்..

நிஜம்


கணவன் மனைவி

இரண்டு சம்பளம்

வீட்டிலே ஏகப்பட்ட பொருட்கள்

அன்பைத் தவிர....

புரிவாயா நீ….!


குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி..
ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை...
அடித்தடித்து.. சொல்லியாயிற்று..
நான் உன்னை நேசிப்பதாய்.

என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று..
உன் மீது நான் கொண்ட நேசத்தை
இதை புரிவாயா நீ….!

இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும்

என்று
கேட்டால்…

என் விழிகள் இரண்டும்
உன்னை

நோக்கி
கணைகளை வீசும்.

என் சுண்டு

விரல் கூட....
உன்னை

நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்..

எப்போதாவது
என் நேசம்


உனக்கு புரியும்
என்ற

எதிர்பார்ப்பில்....!!!!!!

காத்திருப்பேன் உனக்காக!



உன் இதயத்தில்
ஓர் ஒதுக்குப் புறமாய்…
ஓர் மூலையில் கூட…
இடமில்லை என்று
தெரிந்த பின்பும்
இன்னமும் உன்னை நான்
அதிகமாய் நேசிக்கிறேன்.

நீ விலகி விலகிச் சென்றாலும்
விலாகாமல் உன் நினைவுகள்
என்னுள் விருட்சமாய் வளர்கின்றன..

என் முகம் பார்த்து
நீ முகம் சுழித்துச்
செல்லும் போதெல்லாம்
வலிக்கிறது இதயம்.

நீ என்னை
பார்க்காவிடிலும் பறவாயில்லை…
நீ என்னை
நேசிக்காவிடிலும் பறவாயில்லை…

காத்திருப்பேன் உனக்காக!