Showing posts with label Poem by - மலர்கொடி. Show all posts
Showing posts with label Poem by - மலர்கொடி. Show all posts

உணர்ந்தேன் உன்னால்


காதலை பற்றி கல்லூரி காலங்களில் எழும் விவாதங்களில்,
முதலில் எதிர்ப்பு கிளம்புவது என்னிடமிருந்தே..

நானும் அனுபவித்தேன்,
பசியில்லா நாட்களையும்
உறக்கமில்லா இரவுகளையும் உன்னால்...
அது ஒரு இனிய அனுபவம்.

வலியும் வேதனையும் தனக்கு வந்தால் மட்டுமே உணரமுடியும்,
எவ்வளவு பெரிய உண்மை என்பதை
என்னுள் நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்.

நீதான் கேட்டாய்,
எதுவாக இருந்தாலும் சொல் வெளிப்படையாக என்று... மறந்து விட்டாயோ!

ஏன்,
உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை என்றாய்?
காதல் உண்மை என்றால்...அது வாழ்வில் ஒரு முறைதான்.

மனதில் இருப்பவனை மணப்பதுதான் காதலில் சத்தியம்,
நீ யாரை வேண்டுமோ .....

நான் நினைத்தது உன்னை மட்டுமே,
சொந்தமானால் உனக்கு மட்டுமே...

என்றேனும் என் நினைவு தோன்றினால்,
உன் விழியின் ஓரத்தில் வடியும்
ஒரு துளி கண்ணீர் சொல்லும்,
உன்னிடம் என் காதலின் ஆழத்தை...!!


- மலர்கொடி