61 வது விடுதலை நாள் வாழ்த்துக்கள்


அனைத்து இந்திய குடிமக்களுக்கு எனது விடுதலை நாள் வாழ்த்துக்கள்

தபூசங்கர் கவிதைகள் 1


நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
.....


ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய் ......

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது..


உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்

தபூசங்கர் கவிதைகள்


அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.

யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்


என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ

என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்...

தபூ சங்கர் கவிதைகள்


அம்மன்

நீ குளித்து ஓடி வரும் நீரில் பூத்துக் குலுங்கும் சின்னப் பூந்தோட்டம்தான் ஊரிலேயேஅழகான இடம்.திருநாட்களிலும், திருவிழாத் தருணங்களிலும் மட்டும் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துபோகிற அம்மன் நீ. கோயிலில் சற்று நேரம் நீ உட்கார்ந்துவிட்டு எழுந்து போகும் இடத்தை மூன்று முறை சுற்றி வந்து... வெகுநேரம் அங்கேயே கிடக்கிற நாய்க்குட்டிகள் நாங்கள்.
ஊரில் தேர்த் திருவிழா என்றால் எங்களைப் பிடிக்க முடியாது. அன்றுதான் நாள் முழுவதும் உன்னைப் பார்க்கலாம் நாங்கள். தேர் கூடவே நான்கு வீதிகளும் வருவாய் நீ. அப்போதெல்லாம்... ஐம்பது பேர் வடம்பிடித்து இழுத்துப்போகும் தேரிலிருக்கும் தெய்வத்தை விட்டுவிட்டு... ஐந்நூறு பேரின் இதயங்களை இழுத்துப்போகும் உன்னை மட்டுமே தரிசிக்கும் எங்கள் கண்கள்.
ஆனால்...
உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது உள்ளூர் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டாயாம்.கேள்விப்பட்டு... அதிர்ச்சியில் ஊரே உறைந்துபோய்விட்டது. அப்புறம் நீ எங்கோ வாக்கப்பட்டும் போய்விட்டாய். வாழாவெட்டியாகிவிட்டது ஊர்!