காத்திருக்கிறேன்



இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்...,


என் காட்சிகள்,
என்னவோ நீயாகவே....!


என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,


நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி
காத்திருக்கிறேன்.....!!


உன் வரவிற்காக.....................!!!

காதல் கவிதைகள்




கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலைஅழகோ
பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திட‌

திட்டவட்டமான விதிகள்


திட்டவட்டமான விதிகள் இல்லை
ஜன்னலை எப்போது
திறந்து வைப்பது
எப்போது மூடுவது என்பது பற்றி
எல்லாம்...

எளிதல்ல


அனைத்தையும் விட்டு
ஓடுவது என்பது எளிதல்ல,
அறுத்துக் கொள்வது
என்பது வேடிக்கை அல்ல.

வலி .....
மரணவலி, ...........
சகித்துக்கொண்டே மறப்பதற்கு !!!

If you can......

If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you;
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don’t deal in lies,
Or, being hated, don’t give way to hating,
And yet don’t look too good, nor talk too wise

Yours is the Earth and everything that’s in it,
And - which is more - you’ll be a Man my son!

திரும்ப தோன்றுகிறது


உன்னை இழந்துவிட்டிருக்கும்
இக்கணத்தில் .......
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் .......

சற்றே

அடைந்திருக்கலாமென !.

காதல் வைத்து


காதல் வைத்து காதல் வைத்து
காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
அசைந்தாய் !.....
அன்பே..
அசைந்தேன்.
அழகாய்
ஐயோ தொலைந்தேன்?

புலப்படவில்லை



என்ன யோசித்தும்
புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர வேண்டிய
இடைவெளி எதுவென்று

இடைவெளி


இடைவெளிகள் தான்
நெருக்கத்தைத்
தீர்மானிக்கின்றன
எனினும்
நெருக்கமற்ற
இடைவெளிகள்
பிரயோசனமற்றவை

ஆசை வளர்க்காதே

சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே......

வா....

அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்!!!