ராஜா மகள்... ரோஜா மகள்....




நான் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது இந்த பாடலை கேட்க நேர்ந்தது,

மிகவும் இனிமையாக இருந்ததால் அந்த பாடலின் வரிகளை இந்த இணையத்தில் பதிகின்றேன்.



ராஜா மகள்... ரோஜா மகள்....
ராஜா மகள்... ரோஜா மகள்...
வானில் வரும் வெண்ணிலா ... வாழும் இந்த கண்ணிலா...
கொஞ்சும் மொழி பாடிடும்.. சோலை குயிலா.......( ராஜா மகள்)

பன்னீரையும் வென்னீரையும்.....

உன்னோடு நான் பார்க்கிறேன்....
பூவென்பதா..... பெண்ணென்பதா..

நெஞ்சோடுதான் நான் கேட்கிறேன்...
முள்ளோடு தான் கள்ளோடு தான்..

ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம.
கோபம் ஒரு கண்ணில்... தாபம் ஒரு கண்ணில்...
வந்து வந்து செல்ல... விந்தை யென்ன சொல்ல..
வண்ண மலரே.............( ராஜா மகள்)

ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணை இட.. பொங்கும் கடல் ஓயலாம்..
மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
தெய்வ மகள் என்று தேவன் படைத்தனோ...
தங்க சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ..
மஞள் நிலவே.... (ராஜா மகள்)